» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்று அட்டவணை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:46:29 PM (IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ள போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.
இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன.
‘சூப்பர் 4’ மோதல் அட்டவணை விவரம்:
செப்.20 - இலங்கை vs வங்கதேசம் - துபாய்
செப்.21 - இந்தியா vs பாகிஸ்தான் - துபாய்
செப்.23 - பாகிஸ்தான் vs இலங்கை - அபுதாபி
செப்.24 - இந்தியா vs வங்கதேசம் - துபாய்
செப்.25 - பாகிஸ்தான் vs வங்கதேசம் - துபாய்
செப்.26 - இந்தியா vs இலங்கை - துபாய்
இந்த ஆட்டம் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் 28-ம் தேதி அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்த ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 4:16:16 PM (IST)

ரோகித், விராட் சிறப்பான ஆட்டம்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி
சனி 25, அக்டோபர் 2025 5:08:12 PM (IST)

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் : பாகிஸ்தான் அணி விலகல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:09:52 PM (IST)

ஆஸி சென்றடைந்த இந்திய டி20 அணி வீரர்கள்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:30:19 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது இந்தியா!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:06:44 AM (IST)

17 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்தியா தோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:27:10 PM (IST)


.gif)