» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டி-20' உலக சாம்பியனான இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. ஆனால், இந்திய அணியின் குல்தீப் யாதவ் மற்றும் ஷிவம் துபேயின் பந்துவீச்சை அந்த அணியால் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தன.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் அலிஷன் ஷரபு அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். கேப்டன் முகமது வசீம் 19 ரன்களில் குல்தீப் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். முகமது ஜோயிப், ஆசிப் கான், ஹர்ஷித் கவுசிக் ஆகியோர் தலா 2 ரன்னிலும், ராகுல் சோப்ரா 3 ரன்னிலும், துருவ் பரசர், சிம்ரன்ஜீத் சிங், ஹய்தர் அலி தலா ஒரு ரன் எடுத்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 13.1 ஓவரில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஷிவம் துபே3, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் பிறகு, இந்திய அணி 58 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் ஆட்டத்தை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிசேக் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சர்மா 30 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 4.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 20, சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)



.gif)