» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?
புதன் 11, பிப்ரவரி 2026 12:39:47 PM (IST)

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றில், நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் குரூப் சுற்றில், அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இந்நிலையில், வயிற்றுத் தொற்று (Stomach Infection) காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும், நாளை நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகமே. இதன் காரணமாக, அபிஷேக் சர்மாவுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடினார். அதில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காததால், உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அவருக்குப் பதில் அபிஷேக் சர்மா களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:46:51 AM (IST)

ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)


