» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதற்கு காரணத்தை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் ஓய்வு அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.அதன்பிறகு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள். 2009-ம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை ஏற்பட்டது.
இதனால், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், அஸ்வினை சிஎஸ்கே கழற்றிவிடும் எனக் கூறப்பட்டது. அந்த தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் அப்படி பேசவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது: ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். என அவர் கூறினார். பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யு19 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு
சனி 7, பிப்ரவரி 2026 3:43:39 PM (IST)

இந்தியாவுடன் விளையாட மறுப்பு: பாக். அணி மறுபரிசீலனை செய்ய இலங்கை வலியுறுத்தல்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:06:16 AM (IST)

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்று அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:11:13 PM (IST)

யு19 உலகக் கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 11:47:26 AM (IST)

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் : பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:49:49 AM (IST)

