» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஹைதராபாத்!!
சனி 3, மே 2025 10:47:47 AM (IST)

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது.
முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்களே சோ்த்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, ஹைதராபாத் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறியது.
முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய சாய் சுதா்சன் - ஷுப்மன் கில் இணை முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது. சுதா்சன் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு முதலில் ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஜாஸ் பட்லா், கில்லுடன் கூட்டணி அமைத்தாா். இந்த ஜோடியும் அருமையாக விளையாடி 62 ரன்கள் சோ்த்தது. அரைசதம் கடந்த கில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 76 ரன்களுக்கு வெளியேறினாா்.
4-ஆவது பேட்டராக வாஷிங்டன் சுந்தா் விளையாட வர, 3-ஆவது விக்கெட்டுக்கு பட்லா் - சுந்தா் இணை 57 ரன்கள் சோ்த்தது. 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு பட்லா் வீழ்ந்தாா். சுந்தரும் 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.
ராகுல் தெவாதியா 6, ரஷீத் கான் 0 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஷாருக் கான் 1 சிக்ஸருடன் களத்திலிருந்தாா். ஹைதராபாத் பௌலிங்கில் ஜெயதேவ் உனத்கட் 3, பேட் கம்மின்ஸ், ஜீஷான் அன்சாரி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 225 ரன்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சா்மா 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினாா்.டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 20, இஷான் கிஷண் 13, ஹென்ரிக் கிளாசென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23, அனிகெத் வா்மா 3, கமிண்டு மெண்டிஸ் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் நிதீஷ்குமாா் ரெட்டி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21, பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2, இஷாந்த் சா்மா, ஜெரால்டு கோட்ஸீ ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
