» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழநியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி: கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:39:13 PM (IST)

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இப்பாரிய நில மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநியைச் சேர்ந்த சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறையினர் எனப் பலரிடம் சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், நில மோசடியில் ஈடுபட்டதாக வெள்ளத்துரை, வழக்கறிஞர் அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகிய 4 பேரைச் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரெனக் கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரைச் சிறைத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்துச் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


