» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:31:40 PM (IST)



தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலிக் கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாகச் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புறப்பட்டுச் சென்றது. இந்த அமைதிப் பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கியக் கட்சி நிர்வாகிகளுடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

பேரணியின் நிறைவாக, சென்னை மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory