» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருத்தணியில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:09:11 PM (IST)

ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனையொட்டி கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.கே. சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரது வாகனத்தை மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தினர். தனது வாகனத்திற்குக் 'கார் பாஸ்' இருப்பதையும், தான் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் சுட்டிக்காட்டி மேலே செல்ல அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அனுமதி கிடைத்தால் மட்டுமே வாகனத்தை மேலே அனுமதிக்க முடியும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் சேகர்பாபுவிற்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கார் பாஸ் வைத்திருந்த பிற வாகனங்கள் மேலே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது வாகனம் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கோவில் அறங்காவலர்கள் எடுத்துக்கூறியும் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை.
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மலை அடிவாரத்தில் காத்திருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, சேகர்பாபுவின் வாகனம் மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் திருத்தணி கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


