» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!

சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

திருநெல்வேலி மாநகர  பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது, காரில் கஞ்சா கடத்தி வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு காரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர்.

அச்சோதனையில், வாகனத்தில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய 3 கிலோ 450 கிராம் எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வாகனத்தில் வந்த 3 பேரைப் பிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரெட்டியார்பட்டி, பெருமாள்புரம் தினேஷ் (28) – (சரித்திரப் பதிவேடு குற்றவாளி), சத்திரம்புதுகுளம், தச்சநல்லூர் மணி (எ) எஸ்டேட் மணி (44) – (சரித்திரப் பதிவேடு குற்றவாளி) மற்றும் வண்ணாரப்பேட்டை சுந்தரபாண்டியன் (எ) தமிழ் சிங்கம் (25) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்த 3.450 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory