» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்

புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார்.

தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது.

இந்​நிலை​யில் நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்​படி காலை 10 மணிக்கு, பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார். தொடர்ந்து அவர் தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசினார். உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின் தவெக அரசு நல்கிவருவதாகக் கூறினார்.

ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது என்றார். டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

பட்ஜெட் விவரம் வருமாறு:

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

> விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

 பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> 5000 அரசுகப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்.

> பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

> 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.

> போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

> 2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால் திட்​டங்​கள் பொது​மக்​களை கவரும் வகை​யில் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் மகளிர் உரிமைத் தொகை உயர்​வு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டங்​கள் உட்பட பல்​வேறு அறி​விப்​பு​கள் இடம்​பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் பட்ஜெட்டை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

பட்​ஜெட் மீதான விவாதம் முடிந்​தவுடன் தொடர்ந்து துறை​கள் வாரி​யாக மானியக் கோரிக்கை மீதான விவாத​மும் அமைச்​சர்​களின் பதி​லுரை​யும் இடம்​பெறும். இதற்​காக சுமார் ஓரு மாதம் வரை சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடத்த வாய்ப்​பு​கள் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory