» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை மெட்ரோ ரயில் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 12:16:19 PM (IST)

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், பணிகளைக் குறித்த காலத்திற்குள் தரமாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 2-ஆம் கட்டமாக ₹63,246 கோடி செலவில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், மெட்ரோ ரயில் மூலம் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத் தலைமையகத்தில் அதிகாரிகளுடன் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தி, கட்டுப்பாட்டு அறையையும் (Control Room) பார்வையிட்டார்.
நந்தனம் ஆய்வை முடித்துக் கொண்டு கிண்டி சென்ற முதலமைச்சர், கத்திப்பாரா அருகே பட்ரோட்டிலிருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரை 6 தூண்களை இணைக்கும் வகையில் 'பேலன்ஸ்டு கேன்டிலீவர்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ வளைவு ரயில் பாதையைப் பார்வையிட்டார்.1,354 அடி நீளத்தில், 101 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் இந்தச் சவாலான கட்டுமானப் பணிகளின் நிலவரம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, போரூரிலிருந்து ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் அதிநவீன மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் கருத்துகள்: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைக் குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்திப்பாரா பகுதியின் பிரம்மாண்ட மெட்ரோ கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான முன்னெடுப்புகள் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பகல் நேரப் பணிகளுக்குப் பதிலாக இரவு நேரக் கட்டுமானப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


