» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு: ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறுகிறது!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:31:21 AM (IST)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள மாவட்டங்களுக்கு இடையேயான 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அணி வீரர்கள் தேர்வு, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள 'சான்சான் கிரிக்கெட் அகாடமி' பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு இத்தேர்வு நடைபெறும். 23 வயதுக்குட்பட்ட இத்தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் 01.09.2003 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ, 31.08.2012-க்கு முன்பாகவோ பிறந்திருக்க வேண்டும்.
தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிறக் கிரிக்கெட் சீருடை (Cricket Whites) மற்றும் தங்களது விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும். அடையாளச் சான்றின் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் (PDF வடிவில்) வைத்திருக்க வேண்டும்.
தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கூகுள் படிவத்தின் (Google Form) வழியாகத் தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
இத்தேர்வில் தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அவர்கள் வரும் செப்டம்பர் 2026-இல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியின் சார்பில் பங்கேற்பார்கள் என்றும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


