» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

Vaiko4ii.jpg

உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;”தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.

"யாகாவராயினும் நா காக்க" எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழி மொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்கு உகந்தது அல்ல.

அரசுக்கு இடையூறு செய்வதற்கும், அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.

காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரல் அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory