» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெருக்குரல் அறிவு கைது நடவடிக்கை: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:15:04 PM (IST)
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி குரல் கொடுத்த ராப் பாடகர் தெருக்குரல் அறிவைக் கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போராட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், தடிLine தாக்குதல் நடத்தியும் கலைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இச் சூழலில் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சென்னை தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, நீட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் குரல் கொடுக்க வலியுறுத்திக் கோஷமிட்டார். இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசினார்.
இச் சம்பவம் தொடர்பாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:"நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக ராப் பாடகர் 'தெருக்குரல் அறிவு' அவர்களைக் கைது செய்துள்ள அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள். அவரது குரல் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், அறிவு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்லாமல் ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது. இத் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர ஒடுக்கப்படக் கூடாது." இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:25:51 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருவிழாவில் அம்மன் வேடத்தில் திரிஷா பேனர்: அதிரடி அகற்றம் - இருவர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:51:25 AM (IST)

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)


