» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:25:51 PM (IST)

தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்ததாவது: "தமிழகச் சட்டசபைக் கூட்டம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. அன்றைய தினம் 2026-27-ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மறுநாள் (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவுக் (BAC) கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றுவார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார்.
அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். விவாதங்கள் நிறைவடைந்த பின் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
புதிய அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பு இப் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

தெருக்குரல் அறிவு கைது நடவடிக்கை: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:15:04 PM (IST)

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருவிழாவில் அம்மன் வேடத்தில் திரிஷா பேனர்: அதிரடி அகற்றம் - இருவர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:51:25 AM (IST)

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)


