» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவிழாவில் அம்மன் வேடத்தில் திரிஷா பேனர்: அதிரடி அகற்றம் - இருவர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:51:25 AM (IST)

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடிகை திரிஷாவை அம்மன் போல் சித்தரித்து வைக்கப்பட்ட விளம்பரப் பேனர் இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா குறித்துச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் அடிக்கடி பேசுபொருளாகி வருகின்றன. இச் சூழலில், ஆடி மாதத் திருவிழாவையொட்டி ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் சார்பில், ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் விளம்பரப் பேனர்கள் வைக்கப்பட்டன.
அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவப்படமும், அதற்குப் பின்னால் ராவணன் தலை இருப்பது போன்றும், கீழே நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்றும் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இப் பேனரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி நெட்டிசன்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியது.
"கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத சூழலில், கோவில் திருவிழாவில் நடிகையின் புகைப்படத்தை அம்மன் வேடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். நீதிமன்றங்களும் அரசும் பேனர்கள் வைப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இதுபோன்ற அத்துமீறல்கள் நடப்பது குறித்து இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.
எதிர்ப்பு வலுத்ததையடுத்து, இரவோடு இரவாக அப் பேனரிலிருந்த நடிகை திரிஷாவின் புகைப்படம் மறைக்கப்பட்டு, வேறொரு பெண் அம்மன் வேடத்தில் இருக்கும் படம் ஒட்டப்பட்டது. ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றிப் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஆத்தூர் டவுன் காவல்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
இச் சம்பவம் தொடர்பாகக் கடைவீதியைச் சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஆகிய இருவர் மீது ஆத்தூர் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் நேர்ந்த இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

தெருக்குரல் அறிவு கைது நடவடிக்கை: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:15:04 PM (IST)

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:25:51 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)


