» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜூலை 1ல் அமல்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:33:44 AM (IST)
தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 2031ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், காப்பீட்டு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் (Cashless) 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெறலாம். மேலும், 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வசதி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாகக் கார் பஸ் நிதி மூலம் 15 லட்சம் ரூபாய் வரை உதவி கிடைப்பதால், அவர்கள் மொத்தம் 27 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெற முடியும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தில் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக 1,535 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குறைந்த ஊதியம் பெறும் இத்தகைய ஊழியர்களுக்கான பிரீமியத் தொகையை அரசே ஏற்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்: கட்சித் தலைமை அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 5:19:48 PM (IST)

பள்ளி அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
சனி 27, ஜூன் 2026 4:34:36 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 4¾ பவுன் தங்க நகைகள் திருட்டு - வாலிபர் கைது!
சனி 27, ஜூன் 2026 4:07:34 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் மீது நடவடிக்கை : நயினார் நாகேந்திரன் கோரிக்கை!
சனி 27, ஜூன் 2026 3:54:12 PM (IST)

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)


