» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் மீது நடவடிக்கை : நயினார் நாகேந்திரன் கோரிக்கை!

சனி 27, ஜூன் 2026 3:54:12 PM (IST)

தமிழக வெற்றி கழக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டும், அதற்கு அவர் அளித்துள்ள தன்னிலை விளக்கமும் திருப்தியளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: "தவெக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத், பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது.

சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 'ஆன்டிபயாடிக்' உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே மருத்துவர்கள் 'டானிக்' வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை. உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு, தந்தை ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா?

குறிப்பாக, குழந்தைக்குக் கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே தயாரான மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்?

இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதலமைச்சர் விஜய் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory