» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
சனி 27, ஜூன் 2026 4:34:36 PM (IST)
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள புதிய அடையாள அட்டைகளில் சாதி குறித்த விவரங்கள் இடம்பெறாது என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்குச் சாதிப் பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறியதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், தனது பேச்சு குறித்து அவர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.இது குறித்துச் செங்கோட்டையன் கூறியதாவது: "வருவாய்த் துறையும் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களுக்கு முகவரி, ரத்த வகை, அடையாள அட்டை மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை க்யூ.ஆர் கோடு (QR Code) மூலமாக வழங்கலாமா என்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, வருவாய்த் துறை அதிகாரிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று சாதிச் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். இந்த நடைமுறை இனியும் தொடரும்.
அதே நேரத்தில், தற்போது வழங்கப்படவுள்ள புதிய அடையாள அட்டைத் தரவுகளில் சாதி குறித்த விவரங்கள் கண்டிப்பாக இடம் பெறாது. பள்ளிகளில் மாணவர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். விபத்துகள் போன்ற அவசர காலங்களில் மாணவர்களுக்குத் தேவையான உடனடி மருத்துவ நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரத்த வகை மற்றும் முகவரித் தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படும். பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல, இந்த அடையாள அட்டைத் தரவுகளில் சாதிச் சான்றிதழ்கள் இணைக்கப்படாது" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் உறுதி:
இதே விவகாரம் தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் தனது துறையின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் தேவை இல்லை. புதிய ஐடி கார்டுகளில் சாதிப் பெயரைப் போட மாட்டோம், போடவே மாட்டோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சர்களின் இந்தத் தொடர் விளக்கங்கள் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அடையாள அட்டை சாதி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்: கட்சித் தலைமை அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 5:19:48 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 4¾ பவுன் தங்க நகைகள் திருட்டு - வாலிபர் கைது!
சனி 27, ஜூன் 2026 4:07:34 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் மீது நடவடிக்கை : நயினார் நாகேந்திரன் கோரிக்கை!
சனி 27, ஜூன் 2026 3:54:12 PM (IST)

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு: பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்த 2 எம்எல்ஏக்கள்
சனி 27, ஜூன் 2026 12:40:00 PM (IST)


