» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளியைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (55) மற்றும் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த சந்திரன் (55) உட்பட நான்கு பேர், தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு நடுத்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் நான்கு பேரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மனோகரன் மட்டும் அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் சென்று உறங்கியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த சந்திரன், அங்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த மனோகரனைக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இன்று காலை மற்ற இரு நண்பர்களும் எழுந்து பார்த்தபோது, மனோகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மனோகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி சுதிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் நண்பரே நண்பரை அடித்துக் கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? த.வெ.க தலைவர் விஜய் மீது விசிக புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 4:26:08 PM (IST)

அதிமுக கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:36:21 PM (IST)
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 25, ஏப்ரல் 2026 10:44:27 AM (IST)

திருட்டு வழக்கில் 3 குற்றவாளிகளுக்குக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு
சனி 25, ஏப்ரல் 2026 10:10:05 AM (IST)

