» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் விவகாரம்: 6 பேர் சிக்கினர்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:05:36 PM (IST)
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான "ஜனநாயகன்" ரிலீஸாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்த விவகாரத்தில், தமிழக சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" திரைப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்தச் சூழலில், படத்தின் முழு நீளக் காட்சியும் ஆன்லைனில் கசிந்தது படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் செயலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் சூரி உள்ளிட்ட முன்னணித் திரைப்பிரபலங்கள் தங்களது கடும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். படம் கசிந்தது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரைப் பிடித்து விசாரித்து வந்த நிலையில், தற்போது ஆதாரங்களுடன் 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தப் படத்தை எப்படிப் பெற்றார்கள்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இணையதளங்களில் உள்ள பட லிங்குகளை நீக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரிலீஸிற்குத் தயாராக இருந்த ஒரு பெரிய பட்ஜெட் படம் இவ்வாறு இணையத்தில் கசிந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)

