» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி

திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். இலவச மிக்சி கொடுத்துவிட்டால் அதில் எதை அரைப்பது. கிரைண்டரில் எதை ஆட்டுவது. பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது.

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. என் இனத்திற்கு நிகழ்கால தேவை மட்டும் தான் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

வேடிக்கை பார்ப்பவன்Aug 20, 1776 - 12:30:00 AM | Posted IP 172.7*****

இவன் ஒரு குழப்ப வாதி, பழங்கால கற்காலத்தில் கொண்டு வந்து விடுவான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory