» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக விஷு மகாஜன் பொறுப்பேற்பு

வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:54:10 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இளம்பகவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது: இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். வரலாற்று சிறப்புமிக்க மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 –யை சுதந்திரமாகவும், நியாயமாகவும் மற்றும் அமைதியான முறையில் நடத்துவதாகும். 

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியில் அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை தருமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பொதுமக்களும் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

தேர்தல் பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் மற்றும் விதிகளின்படி செய்யப்பட்டு வருகின்றன. அந்த அறிவுறுத்தல் மற்றும் விதிகளின்படி மாவட்ட நிலையிலான அலுவலர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றினைந்து செயல்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 யினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory