» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கழுகுமலை கோவிலில் திருக்கல்யாண வைபவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:54:10 AM (IST)

பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் - வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 31-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 10-ஆம் நாள் திருவிழாவாக நேற்று முன்தினம் இரவு வேடுவர் சமுதாயம் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. மதியம் உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் உச்சகட்ட நிகழ்வாக, நேற்று இரவு 7 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் மணக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சரியாக இரவு 7:30 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி - வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பிறகு பக்தர்களுக்குத் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் தகராறு : சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:56:27 AM (IST)

அனுத்தொகை மங்கலம்: கடல் கொண்ட பாண்டிய நாட்டுப் பெருநகரின் மர்மம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:07:27 AM (IST)

பராமரிப்புப் பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:37:23 AM (IST)

தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:57:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 7:42:13 PM (IST)

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.5!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:42:22 PM (IST)

