» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதவ் அர்ஜுனா கார் ஏறியதில் காவலர் கால் முறிவு: விஜய் பிரச்சாரத்தில் பரபரப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:45:13 PM (IST)

திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது, அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கால் முறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், இன்று நண்பகல் 12 மணியளவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மரக்கடை பகுதியில் பிரசார வாகனத்தில் நின்றபடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பிரசாரம் நிறைவடைந்த பிறகு, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பிரசார வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவிற்குச் சொந்தமான கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவலர் சதீஷ் என்பவரின் கால் மீது எதிர்பாராத விதமாக காரின் சக்கரம் ஏறியது.
இந்த விபத்தில் காவலர் சதீஷின் கால் எலும்பு முறிந்து, அவர் வலியால் துடித்தார். உடனே அங்கிருந்த சக காவலர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் இணைந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்: ஆட்சியர் இரா.சுகுமார் அதிரடி உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:08:56 PM (IST)

பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: நயினார் நாகேந்திரன் உறுதி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:49:44 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனுத் தாக்கல்: மும்முனைப் போட்டியில் த.வெ.க!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:02:35 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் சோதனை தீவிரம்: ரூ.9,81,298 மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:19:36 PM (IST)

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)

தன்னையும் மக்களையும் நம்பாதவரே இரு தொகுதிகளில் போட்டி: விஜய் மீது சீமான் விமர்சனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:00:26 AM (IST)

