» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: நயினார் நாகேந்திரன் உறுதி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:49:44 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை (ஏப்ரல் 3) வெளியாகும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்: வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் எந்தத் தாமதமும் இல்லை; இதனால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நாளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார். அவர் வருகைக்குப் பிறகு அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்படும்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரசாரப் பாடல்கள் குறித்து நயினார் நாகேந்திரன் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்: திமுகவின் தேர்தல் அறிக்கை 'ஹீரோ' அல்ல, அது ஒரு 'ஜீரோ'. அது 'ஹீரோயின்' அல்ல, சமூகத்தைச் சீரழிக்கும் 'ஹெராயின்' போன்றது.
தமிழகத்தில் தற்போது தனி மனிதர்களுக்கோ, பெண்களுக்கோ, ஏன் பத்திரிகையாளர்களுக்கோ கூட பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கூட வாசல்களிலேயே தாராளமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. வெறும் பிரசாரப் பாடல்களை வெளியிடுவதால் மட்டும் திமுக வெற்றி பெற்றுவிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 5 தொகுதிகளை மாற்றிக் கோரி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இழுபறிக்கு மத்தியிலும், நாளை பட்டியல் வெளியாகும் என்ற அறிவிப்பு பாஜக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.5!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:42:22 PM (IST)

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்: ஆட்சியர் இரா.சுகுமார் அதிரடி உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:08:56 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனுத் தாக்கல்: மும்முனைப் போட்டியில் த.வெ.க!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:02:35 PM (IST)

ஆதவ் அர்ஜுனா கார் ஏறியதில் காவலர் கால் முறிவு: விஜய் பிரச்சாரத்தில் பரபரப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:45:13 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் சோதனை தீவிரம்: ரூ.9,81,298 மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:19:36 PM (IST)

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)

