» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு ஆணை எண்: 708, பொது (பல்வேறு) துறை, நாள்: 11.11.2012 மற்றும் அரசு ஆணை எண்: 1, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VI) துறை, நாள்: 03.01.2012 ஆகியவற்றின் படியும்; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கடித எண்: ஆர்3/118/2024, நாள்: 05.03.2026-ன் படியும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் அனைத்து மதுபானக் கடைகளும் (FL1 உரிமங்கள்) மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்களும் (பார்கள்) மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், தங்கும் விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் அன்றைய தினம் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. விதியை மீறி யாரேனும் மதுபானங்களை விற்பனை செய்ய முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory