» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு, இந்தியில் "கர்தவ்ய த்வார்” எனப் பெயரிடப்பட்டிருந்ததற்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்தப் பெயரை மாற்றத் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தித் திணிப்பு நடவடிக்கையாகக் கருதப்பட்ட இந்தப் பெயர்ப்பலகைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: "பாஜக அரசின் இந்தித் திணிப்பு வெறி எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயரை வைத்துள்ளனர். 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' என்ற அடிப்படையில் இந்திப் பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைப்பது இழிவான செயல். இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட்டு, சரியான தமிழ்ப் பெயர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் எதிர்ப்பை மத்திய அரசு சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.
திமுகவினர் போராட்டம் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
முதலமைச்சரின் கண்டனத்தைத் தொடர்ந்து, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகம் முன் திரண்ட திமுகவினர், கல்வெட்டில் இருந்த இந்திப் பெயரின் மீது கருப்பு மை பூசி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். முன்னதாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்தப் பெயரிடல் முறைக்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் அதிகரித்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்திப் பெயரை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்களை மாற்றியமைக்கத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா: பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
புதன் 4, மார்ச் 2026 12:55:26 PM (IST)

