» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
திங்கள் 19, ஜனவரி 2026 8:24:39 AM (IST)

சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக அன்புசேகர் என்பவரும், கண்டக்டராக கந்தசாமி என்பவரும் பணியில் இருந்தனர்.
இந்த பஸ் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுவப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பஸ்சில் இருந்து புகை வெளியேற தொடங்கியது. இதனை பார்த்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை கீழே இறங்குமாறு கூறினார். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு இறங்கினர். சிறிதுநேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் மளமளவென பஸ் முழுவதும் தீ பரவியது.
உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளின் செல்போன்கள் மற்றும் உடைமைகள் தீயில் கருகின. தொடர்ந்து பஸ்சில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் தீப்பிடித்து எரிந்ததால் நான்கு வழிச்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வெளியூர் செல்லும் வாகனங்களில் வந்த பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு : பாஜக கண்டனம்
திங்கள் 19, ஜனவரி 2026 5:22:41 PM (IST)

சொத்தை பிரித்து தராததால் பெற்ற தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது!
திங்கள் 19, ஜனவரி 2026 3:24:16 PM (IST)

அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக நீலிக்கண்ணீர் : அன்பில் மகேஸ் சாடல்!
திங்கள் 19, ஜனவரி 2026 12:49:31 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 10:53:39 AM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்!
திங்கள் 19, ஜனவரி 2026 10:21:51 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

