» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி : இபிஎஸ்- அன்புமணி அறிவிப்பு !

புதன் 7, ஜனவரி 2026 10:22:53 AM (IST)



தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை வென்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கூட்டாக தெரிவித்தனர். 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள். இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி. திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றார்.

இதன்பின்னர் பேசிய அன்புமணி," பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory