» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் நகராட்சி கழிப்பிடங்களில் கட்டண விவரம் : ஆணையாளர் உத்தரவு

வியாழன் 8, ஜனவரி 2026 7:43:10 AM (IST)

திருச்செந்தூர் நகராட்சி கழிப்பிடங்களில் மக்கள் பார்வைக்கு கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் பகத்சிங் பேருந்து நிலையம், ஆவுடையார்குளம், எடிசன் மருத்துவமனை அருகில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ளிட்ட 11 இடங்களில் நகராட்சி சார்பில் கட்டண குளியல் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை ஏலம் எடுத்து குத்தகைதாரர்கள் நடத்தி வருகின்றனர். இந்த கழிப்பிடங்களில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் வீடியோ காட்சி பரவியது.

இந்நிலையில், கட்டண கழிப்பிடங்களை ஆய்வு செய்த ஆணையாளர், கட்டண விவரத்தை மக்கள் பார்வையில் தெரியும்படி ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டார். கழிப்பிடத்துக்கு ரூ. 5, ரூ. 10, குளிப்பதற்கு ரூ. 10 என்ற விவரம் இடம்பெற வேண்டும். புகாருக்கு 9363779191 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory