» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

வெள்ளி 26, டிசம்பர் 2025 10:59:30 AM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின்படி பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கால அவகாசம் வழங்கியும் விளக்கமளிக்காததால் ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளார். பா.ம.க. கவுரவத் தலைவராக இருந்து வரும் ஜி.கே.மணி பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory