» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் (Powerloom Modernisation Scheme) மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது. 1. சாதாரண விசைத்தறிகளை ரேப்பியர் தறிகளாக மாற்ற 50% (அதிகபட்சம் ரூ.1 லட்சம்),
2. புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்ய 20% (அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்),
3. பொது வசதி மையம் அமைக்க 25% (அதிகபட்சம் ரூ.5 லட்சம்) மானியம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் திருநெல்வேலி சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 627009 என்ற முகரியினை அணுகி தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடியாப்பம் விற்க உரிமம் அவசியம் : தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:03:09 PM (IST)

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமிஅறிவிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 11:23:40 AM (IST)

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 11:19:37 AM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:59:30 AM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

தித்வா புயலால் நீரோட்ட மாறுபாடு எதிரொலி: தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:39:32 AM (IST)


.gif)