» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தித்வா புயலால் நீரோட்ட மாறுபாடு எதிரொலி: தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:39:32 AM (IST)

தித்வா புயலால் கடல் நீரோட்ட மாறுபாட்டினால் தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு உருவாகியுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளது. நாட்டின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 6-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப்பகுதி முடிகின்றது. வங்கக்கடல் பகுதியில் கடந்த மாதம் ‘தித்வா’ புயல் உருவானது. இந்த புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் 5 நாட்கள் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
சில நாட்கள் கழித்து தித்வா புயலால் தனுஷ்கோடி கடல் பகுதியில் புதிதாக மணல் திட்டு ஒன்று உருவாகி உள்ளது. அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து பார்த்தாலே புதிதாக உருவான மணல் திட்டு தெளிவாக தெரிகின்றது. மிகவும் சிறிதாக இருந்த இந்த மணல் திட்டு தற்போது ஏற்பட்டு உள்ள கடல் நீரோட்ட மாறுபாடு காரணமாக பெரிய மணல் திட்டாக காட்சியளிக்கின்றது.
புதிதாக உருவான மணல் திட்டில் ஏராளமான கடல் காவா என்று அழைக்கப்படும் கடல் புறாக்கள் குவிந்து முகாமிட்டு உள்ளன. அவை அங்கு இருந்து இரை தேடுகின்றன. ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று கடலின் நடுவே புதிதாக உருவாகியுள்ள இந்த மணல் திட்டை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் : விபத்தை தவிர்க்க போலீசார் வழங்கினர்!!
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:34:53 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது: ஜன.3ல் ஆருத்ரா தரிசனம்
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:16:23 AM (IST)

ஈ.வெ.ரா. வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா? சீமான் கேள்வி
வியாழன் 25, டிசம்பர் 2025 9:04:57 PM (IST)

அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
வியாழன் 25, டிசம்பர் 2025 8:45:54 PM (IST)
_1766667787.jpg)
இருக்கன்குடி பாதையாத்திரை சென்ற 3பேர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 6:33:31 PM (IST)


.gif)