» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக வேட்பாளர்களின் பெயரையாவது விஜயால் சொல்ல முடியுமா?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

வியாழன் 25, டிசம்பர் 2025 5:41:01 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொல்ல முடியுமா? என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்.

அவர் மக்களை சந்திக்கும்போதெல்லாம் தமிழகத்தில் திமுக- தவெக இடையில்தான் கூட்டணி எனப் பேசி வருகிறார். இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்ததால் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. மேலும், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தவெக அறிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியும் தவெக உடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதனால் அதிமுகவினர் விஜய் மற்றும் விஜய் கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். பாஜக-வினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் "இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம். ஆனால், இது சினிமா அல்ல. தவெக-வுக்கு கட்டமைப்பு கிடையாது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொல்ல முடியுமா?" என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory