» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேருக்கு தலா ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு அளித்தது.
கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் சேசுராஜா (52) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான குருசாமி மகன் மாரிச்செல்வம் (41/2025) மற்றும் ஆறுமுகம் மகன் அருண்சிங் (33/2025) ஆகியோரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று மாரிச்செல்வம், மற்றும் அருண்சிங் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 7,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக காவலர் சிவன்ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பிளஸ்-2 தேர்வுக்கு மினி ஜெராக்ஸ் பிட்: ஜெராக்ஸ் கடைகளுக்கு கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:00:20 AM (IST)

பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

தமிழகம் வளர்ச்சியில்லை, வீழ்ச்சியில்தான் உள்ளது: திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் சாடல்
திங்கள் 2, மார்ச் 2026 5:34:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் சுகுமார் மனுக்களைப் பெற்றார்
திங்கள் 2, மார்ச் 2026 5:25:10 PM (IST)

