» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!

திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, (டிச.15) இன்று பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,515-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைக் கடந்தும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த கணிப்பு பலித்துள்ளது.காரணம் என்ன? தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. சர்வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவின் தாக்கத்தால், தங்​கம் விலை உயர்ந்​து வருகிறது. இந்நிலையில், 22 காரட் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680-க்கும் விற்பனையானது. மேலும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,08,744 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.83,200-க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மற்றுமொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,515-க்கும், ஒரு பவுன் ரூ.1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காலையில் கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் 720 ரூபாய் அதிகரித்த நிலையில், தற்போது பவுனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,00,120-க்கு விற்பனையாகிறது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 215-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory