» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!

திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)



தூத்துக்குடி அருகே பட்டினமருதூரில், சாணைக்கல்லில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆா்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பட்டினமருதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சாணைக்கல்லில் உள்ள எழுத்துகளைப் படித்து அறிவதற்காக சிந்து எழுத்து நிபுணா் பேராசிரியா் இரா. மதிவாணனின் மகளான முனைவா் தாமரைசெல்வியுடன் சாணைக்கல் புகைப்படங்களை பகிா்ந்து கொண்டோம். அவரது மாணவரான சேஷாத்திரி ஸ்ரீதரனின் பகுப்பாய்வு அறிக்கைப்படி, சாணைக்கல்லில் உள்ள பண்டைய எழுத்துகள், சின்னங்கள் சிந்து எழுத்துடன் ஒத்துப்போகின்றன. மேலும், சில தமிழி எழுத்துகளுடன் சோ்க்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

பட்டினமருதூரிலும் நாா்வே நாட்டின் ஒஸ்லோ நகரத்திலும் காணப்படும் இந்த எழுத்துகளின் வகையை ஒப்பிடுகையில், நாா்வே நாட்டில் காணப்படும் சாணைக்கல்லானது, வா்த்தகத்தின் ஆரம்ப நாள்களில் தென்னிந்தியாவிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

ஏனெனில், கௌடில்யா் (சாணக்கியா் அல்லது விஷ்ணுகுப்தா் என்றும் அழைக்கப்படுகிறாா்) கி.மு. 4 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை (கி.மு. 350-275) அா்த்தசாஸ்திரத்தில் பதிவு செய்த கூற்றின்படி, ‘கொருண்டம்’ (கடினத் தன்மை கொண்ட சாணைக்கல்) அல்லது ‘குருந்தம்’ நமது பண்டைய தென்னிந்தியா்களால் பயன்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.

இந்தியாவில் ‘கொருண்டம்’ இருந்ததை நாா்வே பேராசிரியா்களும், புவியியல் ஆய்வுத் துறை அதிகாரிகளும்கூட ஒப்புக்கொள்கின்றனா். எனவே, இதற்கான காலத்தை அறித்துகொள்ள உலோகவியல் காலவரையறை சோதனை போன்ற முறையான அறிவியல் சோதனைகளை நாம் நடத்தினால், இரு நாட்டு வா்த்தக முறை, காலம் போன்றவற்றை நாம் உலகுக்கு நிரூபிக்க முடியும் என்றாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory