» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திங்கள் 24, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

எஸ்.ஐ.ஆரை எதிர்த்து இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி செய்கிறது. அது அவர்களுக்கு கை வைந்த கலை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவுதான் உண்மை நிலை. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லைமுன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால் மழையில் நெல் நனைத்திருக்காது. 

காவிரி படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் 100க்கு 100 சதவீதம் வெற்றி என மார்தட்டக்கூடாது. வெற்றி பெற வைத்த மக்களுக்கு செய்ய வேண்டும். விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் திரைப்படம் பார்க்க செல்கிறார் முதல்-அமைச்சர். 

4 ஆண்டுகளில் குறுவை சாகுபடி விவசாயிகளை பயிர் காப்பிட்டு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை. வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என கூறட்டும். 3 வேளாண் சட்டம் என்ன என்று முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. அவர் சொல்லட்டும் நான் பதில் கூறுகிறேன். கோரிக்கைகள் நீங்கள் கேட்டு வாங்க வேண்டும் அதனைகூட எதிர்க்கட்சிதான் செய்ய வேண்டி இருக்கிறது. காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான். சட்டமன்ற உறுப்பினரானது முதல் இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த காரணத்தை கூறவில்லை. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி செய்கிறது. அது அவர்களுக்கு கை வைந்த கலை ஆகும். எஸ்.ஐ.ஆர். வரக்கூடாது என திமுக அரசு துடிக்கிறது. ஆளும் கட்சி அவர்கள் தான். என்ன பிரச்சினை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory