» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது: விஜய் இரங்கல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:05:34 PM (IST)
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திங்கள் 24, நவம்பர் 2025 9:26:58 PM (IST)

இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திங்கள் 24, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:40:48 PM (IST)

எஸ்.ஐ.ஆர்.பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!
திங்கள் 24, நவம்பர் 2025 4:08:22 PM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 24, நவம்பர் 2025 3:53:47 PM (IST)


.gif)