» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 2,632 பேர் எழுதினர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த முதல் தாள் ஆசிரியர் தகுதி தேர்வு தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 மையங்களில் நடந்தது. இந்த தேர்விற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்து 36 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் நேற்று நடந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 632 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை முன்னிட்டு தேர்வு நடந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தூத்துக்குடியில் தேர்வு நடந்த விகாசா பள்ளி மையத்தை ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான 2-ம்தாள் தேர்வு இன்று நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 29 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில் கலந்து கொள்ள 9 ஆயிரத்து 150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory