» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வை தந்தையும், மகனும் எழுதிய ருசிகரம் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் உமர் பாரூக். அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த கல்வி தொடர்பான சட்டத்தின் படி, தற்போது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இதன் படி தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணி தேடுபவர்கள் பி.எட். பயிலும் மாணவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். இத்தேர்வில் ஆசிரியரான உமர் பாரூக், தற்போது ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் அவர் தம் மகன் தானிஷ் ஆகிய இருவரும் தேர்வெழுதினர்.
இந்த ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில், இம்மாணவர் பத்தாம் வகுப்பு பயின்ற போது வகுப்பாசிரியராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியைத் தக்க வைக்க தந்தையும், ஆசிரியர் பணியைப் பெற மகனும் ஒரே நேரத்தில் தேர்வெழுதியது,"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் திருக்குறளை நினைவூட்டியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி : பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
ஞாயிறு 16, நவம்பர் 2025 9:05:57 AM (IST)


.gif)