» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் தரிசன முறை தொடர்பான வழக்கு : அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சனி 8, நவம்பர் 2025 8:43:15 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ஆனால், அங்கு பக்தர்கள் அமரும் இடம், மேற்கூரை, குடிநீர் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே பக்தர்கள் நலன் கருதி சிறப்பு டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். அதேபோல விரைவான தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பக்தர்கள் நலன் கருதி தரிசனத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory