» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் லிஃப்ட் அமைக்க என்டிபிஎல் ரூ.94 லட்சம் உதவி

சனி 8, நவம்பர் 2025 8:02:14 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் லிஃப்ட்  வசதிகள் செய்வதற்காக என்டிபிஎல் நிறுவனம் ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் (என்டிபிஎல்) நிறுவனத்தின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் மின்தூக்கி வசதிகள் செய்வதற்காக ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவகுமார், என்டிபிஎல் தலைமை செயல் அதிகாரி கே.ஆனந்தராமானுஜம் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், என்டிபிஎல் பொது மேலாளர் கே.அரவிந்தராஜா, துணை பொது மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory