» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!

வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)



கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட‌ அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 10.11.2025 முதல் 31.03.2026 வரை 142 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட‌ அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. 

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம் ஏர்வாடி, ராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம், அச்சம்பாடு, கள்ளிகுளம் ஆகிய பாசன பரப்புகளில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory