» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மே 22-ஆம் தேதி தொடங்குகிறது

வெள்ளி 16, மே 2025 8:23:31 AM (IST)

தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மே மாதத்திற்கான தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 22-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

நெல்லை ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகே ரோகிணி கோல்டு அகடாமியில் நடக்கும் இந்த பயிற்சி முகாமில், தங்கத்தின் தரம் அறிதல், ஹால்மார்க் தரம் அறியும் விதம், உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் மற்றும், தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, கல், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் வழிமுறைகள் ஆகியவை கற்றுத்தரப்படும்.

பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் பணி குறித்தும், அதனை பெறும் முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். இதில் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் பயிற்சியில் பங்கேற்கலாம். வயது வரம்பு, கல்வித்தகுதி தேவையில்லை.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சிக்கு கட்டணம் உண்டு. மேலும் விவரங்களுக்கு 9842180162 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். பயிற்சி சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory