» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: அமைச்சர் அறிவிப்பு

வியாழன் 15, மே 2025 7:49:51 AM (IST)

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி மே 16 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களான https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகியவற்றில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம். தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory