» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் 10 நாள்களுக்கும் மேலாக 100 டிகிரி வெயில்: மக்கள் அவதி!

வியாழன் 11, ஏப்ரல் 2024 12:37:18 PM (IST)

நெல்லையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடா்ச்சியாக 100 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

திருநெல்வேலியில் கடந்த மாா்ச் மாதத்தின் இறுதி முதலே வெயிலின் தாக்கம் தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதல் 100 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று  100 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடா் வெயில் காரணமாக அனல் காற்றும் வீசுவதால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மக்களின் அன்றாட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலங்களிலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால், இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், அம்மை உள்ளிட்ட வெயில் கால நோய்களும் பரவி வருகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory