» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்க கூடாது: டி.டி.வி. தினகரன்

வியாழன் 2, மே 2024 4:05:08 PM (IST)

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்க கூடாது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2023-24-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படாது என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியையும் மீறி தற்போது நடைபெறும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை அம்மாணவ, மாணவியர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும்.

எனவே, சிறுபான்மை சமூகமான பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயலான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, சீர்மரபினர் நலச்சங்கத்தின் கோரிக்கையின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory