» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செங்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி சுனில் ராஜா பங்கேற்பு

வியாழன் 11, ஏப்ரல் 2024 12:13:22 PM (IST)



செங்கோட்டையில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி சுனில் ராஜா சட்ட உதவிகள் பெறுவது குறித்து பேசினார்.

செங்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில்  வட்ட சட்ட இயக்க தினத்தை சிறப்பிக்கும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் செங்கோட்டை ஏ.கே நகர் பகுதியில் அமைந்துள்ள முத்து டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சுனில்ரஜா தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார்.  

அப்போது அவர் சட்டம் தெரியாது என்று யாரும் கூற முடியாது என்பது பற்றியும், மேலும் குறைந்தபட்ச கூலி, வாகன விபத்தில் நஷ்ட ஈடு கோருதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சட்ட உதவி பெறுவது குறித்தும், வட்ட சட்ட பணிகள் குழுவின் பணிகள் குறித்தும் விளக்கி பேசினார்.அரசு குற்றத்துறை வழக்கறிஞர் சுரேஷ், வழக்கறிஞர் கார்த்திகைராஜன், ரேஷ்மா ஆசாத், டெய்லரிங் மாணவிகள், ஆரி டிசைனிங் வொர்க் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அரசின் சட்ட உதவிகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக முத்து டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் முதல்வர் வரவேற்று பேசினார். முடிவில் ஓவியா ஆரி டிசைனிங் வொர்க் முதல்வர் ஓவியா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள்குழு உதவி மைய நிர்வாகி ஜெயராமன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory